Legacy of Life
Blog Post » Are there still takers for truth?
Written by Rampert Ratnaiya
Posted: June 25, 2020

At Christ’s trial, Pilate asked the Lord Jesus in exasperation “What is Truth?” Pilate, an intelligent educated Roman governor, living in a milieu of political intrigue and personal ambitions, knew that the world's definition of “truth” varied according to expedience. “What ‘truth’ are you talking about, Lord Jesus?" "What is your take on 'truth?'" were his real questions. There are many pretenders to the throne. Lies masquerade as truth at times and people find it convenient to believe a convenient lie instead of an unpalatable truth for the sake of personal temporal gain or to placate their conscience. Does Truth have any takers still? Surprisingly It seems so.

In the days prior to the crucifixion of Christ, there came a man, in a rough dress made of camel’s hair held together by a leather belt, preaching an unsettling message in the wilderness. This is in total contrast to some of the slick, soothing, plush, preachers today in many fancy mega churches.  However, John’s, ministry was a roaring success. Large crowds from Jerusalem and Judea flocked to him. What was he asking them to do? He was asking them to turn away from their sins, confess their sinfulness to God and be reconciled to Him. After that they were ritually ‘purified’ by baptism. Why baptism? What was its significance in all this? Let us take a small digression to clarify what baptism meant in those days. Here is an explanation from Early Church History.org

“By the time of Christ, ceremonial cleanliness by water had become institutionalized into a purity ritual involving full immersion in a mikveh (or miqveh), a “collection of water.” Mikveh purification was required of all Jews before they could enter the Temple or participate in major festivals. Hundreds of thousands of pilgrims converged on Jerusalem for Passover and other major feasts. One hundred mikvehs, attesting to the need for water purification before entering into Temple rites, have been found by Hebrew University’s Benjamin Mazar around the wall adjacent to Herod’s Temple.” 

Baptism was a ritual cleansing that they were all familiar with, undertaken before approaching God. So, a hard message from a crudely dressed man, calling for a predictably undesired change in life, had huge success. Why?

First, and foremost, the message rang true. Every human being knows that they are sinners, even those who have never heard of Christ. In Romans 2:14,15, we find  “Indeed, when Gentiles, who do not have the law, do by nature what the law requires, they are a law to themselves, even though they do not have the law, since they show that the work of the Law is written on their hearts, their consciences also bearing witness, and their thoughts either accusing or defending them.” Every heart that is aware of this burden of personal guilt, is looking for a solution. The guilt in human hearts is not merely psychological, but moral. This being the situation, Johns message offered the perfectly logical solution, “repent from those things that brings you guilt and look to God for a cleansing.” That rang true!!

In a world of comforting lies, the unpalatable truth continues to ring true. The problem with the world is not that they cannot see the truth, but they are unwilling to accept the truth (Romans 1:18-32). Many would rather pursue their own deviant way of life and suppress the Truth. Aldous Huxley an atheist, makes the following case for how he arrived at his belief system.

"I had motives for not wanting the world to have meaning; consequently assumed that it had none, ..." "We don’t know because we don’t want to know. It is our will that decides how and upon what subjects we shall use our intelligence." (Huxley, Aldous, Ends and Means, London: Chatto and Windus 1941 p270)

“For Myself, as, no doubt, for most of my contemporaries, the philosophy of meaninglessness was essentially an instrument of liberation. The liberation we desired was simultaneously liberation from a certain political and economic system and liberation from a certain system of morality. We objected to morality because it interfered with our sexual freedom:..." (ibid,  p273)

"We do not know, because we do not want to know!! We object to morality because it interferes with our sexual freedom!!" It can’t get clearer than this why people do not want ’Truth” that goes against their inward grain.

However, Huxley’s kind are not the only ones in the world. There are others who are seeking Truth that can answer their conscience. Many modern churches, have however denied the seeker from hearing the truth because they have bought into the lie. They think that a comforting lie would increase church attendance rather than an unsettling Truth. Now the messages being preached have changed. The effect however, is just the reverse. The churches expected to be accepted but the reverse happened. Look at what polls tell us. There was a time when Christian clergy were held in high respect. But by 1987 the polls told us that Christian clergy had come down to the 4th place. In 2018 they had slid down to the 17th place. As churches dilute the Truth with lies, the world spits them out of their mouth. There are enough purveyors of lies and one more in the guise of spirituality is just not needed. The lie cannot answer the needs of their conscience. 

The call to reconciliation with God did not change in the ministry of the Lord Jesus. His message too was “repent for the kingdom of God is at hand.” However, John’s baptism fitted into the context of the Law. Grace, and Truth which came through Christ took the possibilities to unimagined heights of communication with God through the rent veil of Jesus’ flesh. Jesus is our Peace, who has broken down every wall. Our souls find our eternal home in Him. This is what the bleeding world needs to hear. People’s souls bear the marks of their sinful choices and their real moral guilt pushes them towards hopelessness and a Christless eternity. Only the Truth has the power to heal and restore. Let us not dilute the Gospel to make it politically correct. Truth still has seekers and therefore Truth still has takers.

சத்தியத்திற்கு இன்னும் இடம் உண்டோ?

 

கிறிஸ்துவின் விசாரணையில், பிலாத்து கர்த்தராகிய இயேசுவிடம் "சத்தியமாவது என்ன?" என்று கோபத்தோடு கேட்டார்.  அரசியல் சூழ்ச்சி மற்றும் தனிப்பட்ட அபிலாஷைகளின் சூழலில் வாழ்ந்து வந்த  புத்திசாலித்தனமான ரோமானிய ஆளுநரான பிலாத்துக்கு, "சத்தியம்" என்பது,  உலகின் வரையறைக்கு ஏற்ப மாறுபடுகிறது என்பதை அறிந்திருந்தார். "கர்த்தராகிய இயேசுவே, நீங்கள் என்ன 'சத்தியம்' பற்றி பேசுகிறீர்கள்?" 'உங்களுடைய ‘சத்தியத்திற்கு’ அர்த்தம் என்ன?" என்பது தான் அவருடைய உண்மையான கேள்விகள். சத்தியம் என்ற சிம்மாசனத்திற்கு  பல பாசாங்குகள் உள்ளன. பொய்கள் உண்மை போல் நடிக்கின்றன.  சில சூழ்நிலைகளில்  இந்த பொய்யான முகமூடியை அணிந்துகொள்வது மக்களுக்கு வசதியாக இருக்கிறது. எதோ ஒரு தனிப்பட்ட தற்காலிக ஆதாயத்துக்காக, அல்லது மனசாட்சியை சமாதானப்படுத்துவதற்காக, சிலர் அப்படிப்பட்ட  பாசாங்கை  ஏற்றுக்கொள்ளுகிறார்கள். இந்த சூழ்நிலையில் “சத்தியத்திற்கு இன்னும் இடம் உண்டோ?” என்ற கேள்வி எழும்புகிறது. ஆச்சரியமாக,  இன்றும்  சத்தியத்திற்கு மதிப்பு உண்டு.

 

கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முந்தின நாட்களில், ஒரு மனிதர், ஒட்டகத்தின் தலைமுடியால் செய்யப்பட்ட தோல் உடை அணிந்து,  வனாந்தரத்தில்  ஒரு கடினமான செய்தியைப் பிரசங்கித்து வந்தார்.  இது, இக்காலத்தில் இருக்கும் பல ஆடம்பரமான “மெகா” தேவாலயங்களில்  கொடுக்கப்படும் மென்மையான, இனிமையான, மக்களை மகிழ்விக்க கூடிய  போதனைக்கு முற்றிலும் மாறுபட்டது. அப்படி இருப்பினும், யோவான்ஸ்நானநின் ஊழியம் ஒரு கர்ஜனை வெற்றியாக இருந்தது.

 

எருசலேம் மற்றும் யூதேயாவிலிருந்து ஏராளமான மக்கள் அவரிடம் திரண்டனர்.  அவர்களிடம்  என்ன செய்யச் சொன்னார்? “பாவத்தை அறிக்கை இட்டு விட்டுவிடு!” “தேவனோடு சமரசம் ஆகுங்கள்,” “மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனி வெளிப்படுத்துங்கள்” என்று எச்சரிக்கை இட்டார். அதன் பிறகு, ஞானஸ்னானம் கொடுத்தார். ஞானஸ்நானம் ஏன்? இவை அனைத்திலும் அதன் முக்கியத்துவம் என்ன? இதை புரிந்துகொள்வதற்காக  Early Church history.org’க்கு சிறிய திசைமாற்றம் செய்து  ஆராய்ச்சி செய்வோம். 

 

"கிறிஸ்துவின் காலப்பகுதியில், நீரின் சடங்கு, ஒரு தூய்மை சடங்காக நிறுவனமயமாக்கப்பட்டது, இது ஒரு மிக்வே “ mikveh (or miqveh) " நீர் சேகரிப்பில்  முழுமையாக மூழ்குவதின் மூலமாக அடையும்  சுத்திகரிப்புக்குரிய சடங்கு.  முக்கிய விழா நேரங்களில், அனைத்து யூதர்களும் தேவாலயத்திற்குள்  நுழைவதற்கு முன்பாக இந்த  “மிக்வே” சுத்திகரிப்பு தேவைப்பட்டது. பஸ்கா மற்றும் முக்கிய விருந்துகளுக்காக நூறாயிரக்கணக்கான யாத்ரீகர்கள் எருசலேமில் கூடினர். ஆலய சடங்குகளுக்குள் நுழைவதற்கு முன்பு நீர் சுத்திகரிப்பு தேவை என்பதை உறுதிப்படுத்தும் நூறு மிக்வேக்கள், எபிரேய பல்கலைக்கழகத்தின் Benjamin Mazar ஏரோது கோவிலுக்கு அருகிலுள்ள சுவரைச் சுற்றி கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.” (Early Church History.org)

 

இதுவரை பார்த்ததை சுருக்கமாக விவரிப்போம். ஒரு தோல் உடை அணிந்த தீர்க்கதரிசி, கடினமான செய்திக்கு பின்பு மக்களுக்கு ஞானஸ்னானம் அளித்து வந்தார்.  அவர் ஊழியம் பலமாக நடந்தது. ஏன்?

 

அதிமுக்கியமாக,  அவர்  செய்தியிலே உண்மை ஒலித்தது.  ஒவ்வொரு மனிதனும் அவன்  பாவி என்பதை அறிவான், கிறிஸ்துவைக் கேள்விப்படாதவர்கள் கூட. ரோமர் 2:14,15 இவ்வண்ணமாக சொல்லுகிறது  “அன்றியும் நியாயப்பிரமாணமில்லாத புறஜாதிகள் சுபாவமாய் நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறபோது, நியாயப்பிரமாணமில்லாத அவர்கள் தங்களுக்குத் தாங்களே நியாயப்பிரமாணமாயிருக்கிறார்கள். அவர்களுடைய மனச்சாட்சியும் கூடச் சாட்சியிடுகிறதினாலும், குற்றமுண்டு குற்றமில்லையென்று அவர்களுடைய சிந்தனைகள் ஒன்றையொன்று தீர்க்கிறதினாலும், நியாயப்பிரமாணத்திற்க்கேற்ற கிரியை தங்கள் இருதயங்களில் எழுதியிருக்கிறதென்று காண்பிக்கிறார்கள்.”

 

தனிப்பட்ட குற்றத்தின் சுமையை அறிந்த ஒவ்வொரு இதயமும் ஒரு தீர்வைத் தேடுகிறது. மனித இதயங்களில் உள்ள குற்றவுணர்வு வெறுமனே உளவியல் ரீதியானது அல்ல, தார்மீகமானது. இந்த நிலைக்கு தான், யோவானின் செய்தி முற்றிலும் தர்க்கரீதியான தீர்வை வழங்கியது. “உங்களுக்கு குற்றத்தைத் தரும் விஷயங்களிலிருந்து மனந்திரும்புங்கள், சுத்திகரிப்புக்காக கடவுளை நோக்கி பாருங்கள்" என்று பிரசங்கித்தார். இந்த செய்தியில் சத்தியத்தின் சான்றிதழ் இருந்தது.

 

ஆறுதலான பொய்களின் உலகில், கடினமான சத்தியம் பிரசங்கிக்க படும் பொழுது “இது உண்மை” என்ற சாட்சி  அதில் அடங்கியுள்ளது. இதை ஒருவனின் மனசாட்சிக்கு தென்படுகிறது. உலகத்துடனான பிரச்சினை என்னவென்றால், அவர்கள் உண்மையைக் காண முடியாது என்பதல்ல, அவர்கள் சத்தியத்தை ஏற்கத் தயாராக இல்லை என்பது தான் கரணம் (ரோமர் 1: 18-32). பலர் தங்கள் சொந்த மாறுபட்ட வாழ்க்கை முறையை பின்பற்றுவதாக சத்தியத்தை வாய்  அடிப்பார்கள். ஆல்டஸ் ஹக்ஸ்லி (Aldous Huxley) ஒரு நாத்திகர், அவர் தனது நம்பிக்கை முறைக்கு எப்படி வந்தார் என்பதற்கு பின்வரும் வழக்கை உருவாக்குகிறார்.

 

"உலகிற்கு அர்த்தம் இருக்கக்கூடாது என்பதற்காக எனக்கு நோக்கங்கள் இருந்தன; இதன் விளைவாக அர்த்தம் எதுவும் இல்லை என்று கருதினேன், ..." (ஒரு காரியத்தை)  "எங்களுக்குத் தெரியாது, ஏனென்றால் நாங்கள் தெரிந்து கொள்ள விரும்பவில்லை. எந்த படத்தை கற்றுக்கொள்ளவேண்டும், எதில்  புத்தியை செலுத்த வேண்டும் என்பதை என் சித்தம் தீர்மானிக்கிறது.” (Huxley, Aldous, Ends and Means, London: Chatto and Windus 1941 p270)

 

"என்னைப் பொறுத்தவரை, என் சமகாலத்தவர்களில் பெரும்பாலோருக்கு, அர்த்தமற்ற தத்துவம் அடிப்படையில் விடுதலையின் ஒரு கருவியாக இருந்தது என்பதில் சந்தேகமில்லை. நாங்கள் விரும்பிய விடுதலை ஒரே நேரத்தில் ஒரு குறிப்பிட்ட அரசியல் மற்றும் பொருளாதார அமைப்பிலிருந்து விடுவிப்பதும், ஒரு குறிப்பிட்ட ஒழுக்க முறையிலிருந்து விடுவிப்பதும் ஆகும். ஒழுக்கநெறியை நாங்கள் எதிர்த்தோம், ஏனெனில் அது எங்கள் பாலியல் சுதந்திரத்தில் தலையிட்டது: ... " (ibid,  p273)

 

"எங்களுக்குத் தெரியாது, ஏனென்றால் நாங்கள் தெரிந்து கொள்ள விரும்பவில்லை !! ஒழுக்கத்தை நாங்கள் எதிர்க்கிறோம், ஏனெனில் அது நமது பாலியல் சுதந்திரத்தில் குறுக்கிடுகிறது." ஏன் மக்கள் தங்கள் உள் நோக்கங்களுக்கு எதிர்மாறான  ‘உண்மையை’ விரும்புவதில்லை என்பதற்கு இதைவிட தெளிவு படுத்த  முடியாது. 

 

இருப்பினும், ஹக்ஸ்லியின் வகை உலகில் மட்டுமல்ல. தங்கள் மனசாட்சிக்கு பதிலளிக்கக்கூடிய சத்தியத்தைத் தேடும் மற்றவர்களும் உள்ளனர். பல நவீன தேவாலயங்கள், இப்படி சத்தியத்தை  தேடுபவர்கள்  சத்தியத்தை கேட்பதற்கு வாய்ப்பளிக்கிறதில்லை. ஏனென்றால் பொய்யை விலை கொடுத்து வாங்கி சத்தியத்தை விற்றுப்போட்டார்கள். 

 

ஒரு ஆறுதலான பொய் ஒரு கடினமான  சத்தியத்தை விட தேவாலய வருகையை அதிகரிக்கும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். அதன் நிமித்தம், பிரசங்கிக்கப்படும் செய்திகள் மாறிவிட்டன. இருப்பினும், இந்த கிரியையில் விளைவோ தலைகீழ். கிறிஸ்தவம் பெருகும் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் தலைகீழ் நடந்தது. கருத்துக் கணிப்புகள் (polls) நமக்கு என்ன கற்றுக்கொடுக்கிறது  என்று பாருங்கள். 

 

கிறிஸ்தவ மதகுருமார்கள் மிகுந்த மரியாதையுடன் நடத்தப்பட்ட ஒரு காலம் இருந்தது. ஆனால் 1987'ல், கிறிஸ்தவ மதகுருமார்கள் 4 வது இடத்திற்கு இறங்கி விட்டதாக  வாக்கெடுப்புகள் தெரிவித்தன. 2018’ஆம் ஆண்டில் அவர்கள் 17 வது இடத்திற்கு சறுக்கிநர். ஏன்? தேவாலயங்கள் சத்தியத்தை பொய்களால் நீர்த்துப்போகச் செய்யும்போது, ​​உலகம் அவர்களை வாயிலிருந்து துப்புகிறது. பொய்களைத் பிரபலப்படுத்துக்காதற்கு   போதுமானவர்கள் உள்ளனர், ஆன்மீக போர்வையில் இன்னொருவர் தேவையில்லை. ஒரு பொய், மக்களின் மனசாட்சியின் தேவைகளுக்கு பதிலளிக்க முடியாது.

 

கர்த்தராகிய இயேசுவின் ஊழியத்தில் கடவுளோடு நல்லிணக்கத்திற்கான அழைப்பு மாறவில்லை. அவருடைய செய்தியும் “காலம் நிறைவேறிற்று, தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிற்று; மனந்திரும்பி, சுவிசேஷத்தை விசுவாசியுங்கள் என்றார்." இருப்பினும், யோவானின்  ஞானஸ்நானம், நியாயப்பிரமாணத்தின்  கால கட்டத்தில் அமைந்துள்ளது. பின்பு , கிறிஸ்துவின் மூலமாக வந்த கிருபையும் சத்தியமும், கற்பனை செய்யமுடியாத அளவிற்கு தேவனோடு உறவை பெருக்கிட்டது.  (இயேசு)  நம்முடைய சமாதான காரணராகி, இருதிறத்தாரையும் ஒன்றாக்கி, பகையாக நின்ற பிரிவினையாகிய நடுச்சுவரைத் தகர்த்து, சட்டதிட்டங்களாகிய நியாயப்பிரமாணத்தைத் தம்முடைய மாம்சத்தினாலே ஒழித்து, இருதிறத்தாரையும் தமக்குள்ளாக ஒரே புதிய மனுஷனாகச் சிருஷ்டித்து, இப்படிச் சமாதானம்பண்ணி, பகையைச் சிலுவையினால் கொன்று, அதினாலே இருதிறத்தாரையும் ஒரே சரீரமாக தேவனுக்கு ஒப்புரவாக்கினார்.  எபேசியர் 2:14-16

 

நம்முடைய ஆத்மாக்கள் … யேசுவில் நித்திய வீட்டைக் காண்கின்றன. இதைத்தான் வேதனைப்படும் உலகம் கேட்க வேண்டும். மக்களின் ஆத்மாக்கள் அவர்களின் பாவமான தேர்வுகளின் விளைவாக வந்த அடையாளங்களைத் தாங்குகின்றன. மேலும் அவர்களின் உண்மையான தார்மீக குற்ற உணர்ச்சி அவர்களை நம்பிக்கையற்ற, கிறிஸ்துவில்லாத நித்தியத்தை நோக்கித் தள்ளுகிறது. குணப்படுத்தவும், மீட்டெடுக்கவும், சத்தியத்திற்கு மட்டுமே அதிகாரம் உண்டு. நற்செய்தியை உலகத்தின் சாயலுக்கு  மாற்றுவதற்காக அதை நீர்த்துப்போகச் செய்யாதீர்கள்.  சத்தியத்தைத் தேடுவோர் இன்றும் இருக்கிறார்கள், அதன் நிமித்தம் சத்தியத்திற்கான ஒரு தளம் இன்றும் உண்டு. 

 

(This is a work in progress. Please do let me know of any typographical or grammatical errors, so that it can be rectified)